கடந்த 4ந் தேதி புனேவில் உள்ள யசோதா என்னும் அரசு நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது. விழாவில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சர் பங்கு கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினர். அதற்கு முதல் நாள் இரவு 11 மணியளவில் ( புதியதாக தைக்கக்ப்பட்ட கோட் ஒன்றை பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றடைந்தோம் ) தெருவில் ஒரு போலிஸ்காரர் கூட தென்பட வில்லை. மேலும் வரவேற்பு கட்அவுட்டோ வளைவுகளை எதுவுமே தென்படவில்லை. அநாவசியமாக எந்தவித பந்தாவும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் விழாவிற்கு வருகைபுரிந்தது மிகவும் ஆச்சரியத்தக்கமாக இருந்தது.
